Saturday, March 24, 2012

உன் விழிகள்........... உன் விழிகள்...........

                                                           
நான் ரசித்த முதல்.
இரு வரி கவிதை தான்,
அவளது இரு விழிகள்...! 




Wednesday, March 21, 2012

உன் விழிகளே என்னக்கு ஆறுதல்...!

கார்த்திருந்த நேரத்தில் கனவுகள்
வரவில்லை ...!
நினைவுகளை விட்டு விலக நினைத்தேன்
ஆனால் தினமும்....!
கனவாக நீ வந்து என்னை கொள்கிறாய்,
கனவிலும் என் நிம்மதியை,
கெடுக்கும் உன் விழிகள் மட்டும் தான்
என்றும் காதலிப்பேன்...!
உன் விழிகளே என்னக்கு ஆறுதல்,
கூறும் இன்னிய மருந்து...!
தினமும் என் கனவில் வந்து என்னை
உன்னோடு மட்டும்...!
என்றும் என்னை வாழவிடு அன்பே
அது மட்டும் எனக்கு போதும்...!

Monday, March 19, 2012

இதயம்...! இதயம்...!

அவளின் நினைவாக...!
இருந்த அனைத்தையும்
அழித்து விட்டேன்...!
அவள் வாழ்ந்த,

என் இதயம் ஒன்றை தவிற......


Saturday, March 17, 2012

என் தோழி...!




என் ஆயுளை அழகாக எழுதினால் 
என் தோழி...! 
அவளது இனிய நட்பினால்,
இனி இறந்தும் அவளோடு 
வாழ்வேன்...! 
நட்பின் நினைவுகளோடு 
அவளுக்கு ஒரு அரணாக............... 




நீ தந்த கண்ணீர் இன்று ஆறாக மாறி உன்னை நோக்கி வருகிறது..........


நீ, தந்த காயங்கள் போதும்
வாழ் நாள் முழுவதும்
உன்னை நினைக்கவே!!!
உன் நினைவுகளாள்,
சிந்தின கண்ணீர் இன்று
மழையாக மாறி என்னை தினமும்
நனைகிறதே!!!
நீ தந்த காயங்களால்
இன்று என் நினைவுகளும்
இறந்தே கிடக்கிறது!!!
உன் நம்பிக்கை ஒன்றே!!!
உயிர் கொடுக்கும் மருந்தாக,
இருக்கும், நீ புரிந்து கொள்ளும் நொடிவரை
உனக்காகவே காத்திருப்பேன்!!!




உன் இரு விழியை பார்க்கவே......................

பூவின் ஆயுள் அது வாடும் வரை,
எனது ஆயுள் நீ வாழும் வரை,
உனக்காகவே துடிக்கும் ஒரு இதயம் 
எனிடம் உள்ளது என்பதை உன் 
இரு விழி பார்வை எனக்கு காட்டியது,
இன்று உன் விழியினை காண முடியாததால்,
மரணத்தை அடைந்தும் உயிர் வாழ்கிறேன்,
உன் இரு விழியை பார்க்கவே......................
 

உன் வார்த்தையால் உடைந்த என் இதயம் உன்னையே இன்னும் நினைக்கிறது

நீ வாழ்ந்த இதயத்தை அறுவடை 
செய்து விட்டாய்...! 
உன் வார்த்தை என்னும் 
ஆயுதத்தால்...! 

Friday, March 16, 2012

உன் நட்பை மட்டுமே என்றும் காதல் செய்வேன் ஒரு உண்மை உள்ள காதலனாக...........

உன் விழிகளை பார்த்தேன் என்றுமே,
அழியாத காதலாக என்னுள் உருவானாய்,
காதலிடம் உன்னிடம் வந்தேன்,
நீ காதலை வெறுத்தாய், என்னை அல்ல,
நீ வெறுத்த காதலை நானும் வெறுத்தேன்,
ஒரு தோழியாக என் இதயத்தில்,
ஒளி ஏற்றினாய், நீ தந்த ஒளியால் 
என் வாழ்வு ஒளி பெற்றது....
உன் இரு விழி பார்வை என் வாழ்வையே 
மாற்றியது, என்னை மாற்றிய உன் நட்பை 
மட்டுமே இன்று காதல் செய்கிறேன்,
நீ என் தோழியாக என் கூட வருவாயா???
என் காதல் என்னும் பயணம் இன்று,
நட்பாக மாறியது உன் இரு விழிகளாலே,
உன் நட்பை மட்டுமே என்றும் காதல் செய்வேன்
ஒரு உண்மை உள்ள காதலனாக...........
 

உன் விழிகளுக்கு இன்னும் புரிய வில்லையா ??

பெண்ணே ! தனிமையில் இருந்தேன்,
உன் நினைவுகளோடு,
என் நினைவுகள் கூட உன் பின்னே வருகிறது,
உனக்கு காவலனாக!
என் நிழல்கள் கூட எனோடு வரவில்லை! 
அதுவும் உன்னோடு கூட நடக்கிறது,
என் மனம் என்னை தினமும் ஏமாற்றுகிறது,
மறக்க நினைக்கும் உன் நினைவுகளை,
மட்டுமே தினமும் நினைப்பதால்,
உன் விழிகளுக்கு இன்னும் புரிய வில்லையா ???
இன்றும் உன்னை மட்டுமே காதல் செய்கிறேன் என்று....
உனக்கு காதல் உணர்வுகள் என் மீது வரும் போது,
என் நினைவுகள் மட்டுமே உனக்கு ஆறுதல்
கூறும் என் கல்லறையில்.....
 

என்றுமே விழித்து இருப்பேன் ..........

கனவில் இருந்து விழித்து எழுந்தேன்,
எழுந்ததும் தான் உணர்ந்து 
கொண்டேன், நான் விழித்துது எழுந்தது 
கனவில் இருந்து அல்ல,
நீ தந்த காதல் என்னும் தூக்கத்தி 
இருந்தே !!!!!!!
இனி என்றுமே விழித்து இருப்பேன் 
இந்த போலி தூக்கம் எனக்கு வேண்டாம்.................
உன் நினைவுகள் என்னும் மாறாத இனிய 
வலி ஒன்றே போதும் பெண்ணே....................... 

உன் பார்வை ஒன்றே என்னை வாழவைக்கும் ...........

தினமும் உன் வார்த்தைகளால்,
நான் இறக்கின்றேன்,
என்னை கொள்ளும் உன் வார்த்தைகளை,
மௌனம் என்னும் உன் மொழிகளால் 
கொன்றுவிடு...
உன் விழிகள் பேசும் வார்த்தையை மட்டும் 
நான் தினமும் சேமிக்கிறேன்.
உன் பார்வை ஒன்றே என்னை வாழவைக்கும் 
ஒரு ஆயுதம், உன் விழி பார்வையால்,
தினமும் எனோடு நீ யுதம்செய்,
யுத்தத்தின் முடிவுதான் நாம் வாழ போகும்
இனிய நாட்களாக அமையும்............. 

உன் விழி பேசும் வார்த்தை...........!

உன் மௌனத்தின் மொழி என்ன என்றேன்,
உன் விழியில் தெரியும் என் காதல்தான் அந்த மொழி என்றால்,
உன் விழி பேசும் வார்த்தைக்காக,

 தினமும் கார்திருகிறேன்...................... 

என் நினைவில் என்றும் நீயே..........

இருவரும் பிரிந்து இருந்தாலும் 
நினைவுகள் என்னும் நட்பின் 
சினம், காதலாக எம்மை 
இணைத்து வைத்துள்ளது..
நினைவுகளால் நாம்  வாழ்வோம் 
தோழியே..
எனக்கு நிம்மதியை தருவது 
உன் நினைவுகள் ஒன்றே.....
அதனாலே நான் இன்று வாழ்கிறேன்
உன் நட்புடன்......
 



உன் மௌனம் தான் நான் பேசும் வார்த்தைகள்




உன்னை நான் மறக்க நினைத்த 
அந்த நிமிடம் தான் என்னை நான் 
அறிந்து கொண்டேன்...!
விழி பார்த்தும், காட்சிகளிள் ஒளி இல்லை, 
வார்த்தைகள் மௌனம் ஆனது...!
உன்னை நினைக்காமல் இருக்க,
ஒரு நிமிடம் நினைத்தேன், 
அந்த நிமிடமே என் உயிரும்,
என்னை விட்டு, உன்னை போலவே...
பிரிந்து சென்று விட்டது.... 



உனக்காகவே துடிக்கும் இதயம்...........





நொறுங்கிய இதயத்தை ஒன்று 
சேர்த்தேன்,
அழியாத காதலாய் என்னுள் 
வந்துவிட்டாள்...! 




அவளுக்காக என் இதயத்தில் இருந்து ஒரு நிமிடம்...

உனக்காகவே துடிக்கும் 
என் இதயம் இன்று 
உண்டு பேசும் 
வார்த்தைகள் தான் 
என் கவிதையாக உன்னை தேடி வருகிறது,
இதை எப்போது அன்பே நீ புரிந்து 
கொள்வாய்......................