Friday, March 16, 2012

உன் நட்பை மட்டுமே என்றும் காதல் செய்வேன் ஒரு உண்மை உள்ள காதலனாக...........

உன் விழிகளை பார்த்தேன் என்றுமே,
அழியாத காதலாக என்னுள் உருவானாய்,
காதலிடம் உன்னிடம் வந்தேன்,
நீ காதலை வெறுத்தாய், என்னை அல்ல,
நீ வெறுத்த காதலை நானும் வெறுத்தேன்,
ஒரு தோழியாக என் இதயத்தில்,
ஒளி ஏற்றினாய், நீ தந்த ஒளியால் 
என் வாழ்வு ஒளி பெற்றது....
உன் இரு விழி பார்வை என் வாழ்வையே 
மாற்றியது, என்னை மாற்றிய உன் நட்பை 
மட்டுமே இன்று காதல் செய்கிறேன்,
நீ என் தோழியாக என் கூட வருவாயா???
என் காதல் என்னும் பயணம் இன்று,
நட்பாக மாறியது உன் இரு விழிகளாலே,
உன் நட்பை மட்டுமே என்றும் காதல் செய்வேன்
ஒரு உண்மை உள்ள காதலனாக...........
 

No comments:

Post a Comment